நிவாரணம் வழங்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாக அதிமுக புகார்

22 September 2020, 6:05 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் தருவதாக புதுச்சேரி அரசு அறிவித்தும் இன்னும் நிவாரணம் வழங்காமல் அரசு அலட்சியம் காட்டுவதாக மதிப்பிட்டு கூட்டத்தில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற மதிப்பீடு குழு மற்றும் பொதுக் கணக்கு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன், பொதுக் கணக்கு குழு தலைவர் சிவா மற்றும் உறுப்பினர்கள் வையாபுரி மணிகண்டன், கீதா ஆனந்தன், தலைமைச் செயலர் அஸ்வினி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமை வகித்த மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன்,
கொரோனாவில் 473 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தது. ஆனால் இதுநாள் வரை இந்த நிதி வழங்கவில்லை. இதனை வழங்குவதில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.