அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விருப்ப மனு தாக்கல்

Author: Udhayakumar Raman
19 September 2021, 5:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் ,ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக ஒன்றிய செயலாளர் மதனந்தபுரம் கே.பழனியிடம் விருப்ப மனு அளித்தனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மலையம்பாக்கம் மற்றும் கொல்லச்சேரி ஊராட்சிகளுக்கு ஒன்றிய தலைவர் பதவிக்கு ப.விஜயா அவர்களும் ,மலையம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நந்தினி தமிழ்செல்வன் அவர்களும் , கொல்லச்சேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு வைத்தீஸ்வரி சசி பட்டேல் அவர்களும் , கொல்லச்சேரி வார்டு உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் கமலேஷ் குமார் அவர்களும் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக ஒன்றிய செயலாளருமான மதனந்தபுரம் கே.பழனியிடம் விருப்ப மனு அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன்கலந்து கொண்டனர்.

Views: - 58

0

0