சசிகலாவுடன் தொடர்பு வைத்துள்ள அதிமுக நிர்வாகிகளை நீக்க வேண்டும் : மதுரையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

19 June 2021, 1:29 pm
Quick Share

மதுரை: சசிகலாவுடன் தொடர்பு வைத்துள்ள அதிமுக நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்ற கண்டன தீர்மானத்தை, எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சசிகலாவிடம் தொலைபேசியில் பேசினாலோ அல்லது அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்வது என்பது குறித்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, திருப்பரங்குன்றத்தில்,MLA ராஜன்செல்லப்பா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெரிய புள்ளான் (எ) செல்வம், திருப்பாங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 82

0

0