திருத்துறைப்பூண்டியில் அதிமுக வழக்கறிஞர் மீது சாணியால் தாக்குதல்

Author: Udhayakumar Raman
16 September 2021, 5:58 pm
Quick Share

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி பகுதியை சேர்ந்தவர் C.சுரேஷ்குமார் இவர் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட இணை செயலாளராக உள்ளார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார் பள்ளங்கோவில். கடியாச்சேரி பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் திருட்டுதனமாகே போர் போட்டு தண்ணீரை திருடி வணிக நிறுவனங்களுக்கு விற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீர் ஏற்றிவந்த லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்தார் வழக்கறிஞர் சி.சுரேஷ்குமார். இந்நிலையில் இன்று காலை கடியாச்சேரி உள்ள தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சுரேஸ்குமாரை சில மர்ம மனிதர்கள் வழிமறித்து அவர் மீதும் அவர் கார் மீதும் சாணியை ஊற்றி தாக்கியுள்ளனர். தன் மீது தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலைமறியலில் ஈடுப்பட்டார். சம்ப இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மயங்கிய நிலையில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் அவர்களை அவரது ஆதரவாளர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சீரான நிலைக்கு திரும்ப வந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறிய தன் பெயரில் உடனடியாக வழக்கறிஞர் சுரேஷ்குமார் அவர்கள் வழக்கறிஞர் சுரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Views: - 141

0

0