அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது: கொட்டும் மழையில் அதிமுகவினர் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
31 August 2021, 4:28 pm
Quick Share

திருவள்ளூர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் கொட்டும் மழையில் அண்ணா சிலை முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தினை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைப்பதை கண்டித்து கலைவாணர் அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் கட்சியினருடன் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆளும் திமுக அரசினை கண்டித்து கண்டனகோஷங்களை எழுப்பி கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 77

0

0