உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்:அதிமுக கிழக்கு மாநில செயலாளர் பேட்டி…

Author: kavin kumar
4 October 2021, 7:28 pm
Quick Share

புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை என்று அதிமுக கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், கள்ள மதுபான ஆலைகள் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு கள்ள மதுபானங்களை கடத்தும் ஒரு பிராந்தியமாக புதுச் மாநிலம் மாறி வருகிறது இதனை ஆளும் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், கலால் துறையில் போதிய அதிகாரிகள் இல்லாததால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக தெரிவித்த அன்பழகன்,

புதுச்சேரி அரசு ஒரு உயர்மட்ட குழு அமைத்து மதுபான கடத்தல் மற்றும் கள்ள மதுபான உற்பத்தி செய்வது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை என்றும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து இட ஒதுக்கீட்டில் அதிமுகவிற்கு கூடுதல் இடங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

Views: - 225

0

0