உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் துடைப்பம் ஏந்தி போராட்டம்

13 January 2021, 4:34 pm
Quick Share

மதுரை: மதுரையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் துடைப்பம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக்கண்டித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக மகளிரணி சமூக வள்ளி தலைமையில் சார்பில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து துடைப்பங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 3

0

0