அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா

Author: Udhayakumar Raman
7 September 2021, 5:59 pm
Quick Share

தருமபுரி: அரூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழாவில் வேளாண்மை கண்காட்சி நடந்தது.

தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் அறிமுகம் மற்றும் துவக்க விழா தருமபுரி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா ரேகா தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் வேளாண்மை துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது. துவக்க விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர்கள் ஒவ்வொரு திட்டங்களும் விவசாயிகளுக்கு சரியான முறையில் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார்கள். நடப்பாண்டில் அரூர் வட்டாரத்தில் பையர்நாய்க்கன்பட்டி, கோபாலபுரம் உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில் இருக்கும் விவசாய பெருமக்கள் பயனடையும் வகையில் வேளாண் பொறியியல் துறை,

கால்நடை பராமரிப்பு துறை, விதைச்சான்று துறை, பட்டு வளர்ச்சி துறை மற்றும் இதர அனைத்து துறைகளில் தமிழக அரசின் மூலம் வரும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதனைதொடர்ந்து விவசாய பெருமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ், வேளாண் அறிவியல் மைய முனைவர்.வெண்ணிலா, இளவரசி உள்ளிட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் விவசாயிகள் விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 178

0

0