தமிழகத்தில் விரைவில் நடமாடும் அம்மா நியாய விலைக் கடைகள் தொடக்கம்… மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…

1 August 2020, 3:18 pm
Quick Share

மதுரை: நடமாடும் அம்மா நியாய விலைக் கடைகள் விரைவில் முதல்வர் தொடங்கி உள்ளதாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் இரத்த தான முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும், அவரது மனைவி ஜெயந்தி ராஜுவும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கலந்து கொண்டார். அதன்பின்பு அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை மாவட்டம் முழுவதும் செயல்படும் வண்ணம் மிக விரைவாக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

கிராமத்தில் 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை நடந்து சென்று நியாய விலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அவர்களுக்கு நகரும் நியாய விலை கடை மூலம் எளிதாக பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படுவதற்காக இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மதுரைக்கு 6-ஆம் தேதி முதல்வர் வர உள்ளார். மதுலையில் பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மதுரை வரும் முதல்வருக்கு சட்ட விதிகளின் படி வரவேற்பு அளிக்கப்படும்.

2 ஆண்டுகளில் மதுரை வளர்ந்த நகரமாக மாற உள்ளது. வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் குழாயை திறந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையைப் பற்றி முதல்வர் அறிவிப்பார். ஆந்திராவில் பிளாஸ்மா தானம் செய்தால் 5000 நிதி என்ற அறிவிப்பு குறித்து சுகாரத்துறை அமைச்சர் ஆலோசிப்பார். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர் வைப்பது எங்கள் முதல்வரின் வேண்டுகோள். வாஜ்பாய், அம்பேத்கார் பெயர் வைக்க பா.ஜ.க வின் வேண்டுகோள். மேலும் பெயர் வைக்க வேண்டுகோள் விடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 11

0

0