அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துவக்கி வைத்த துணை முதலமைச்சர்

Author: Udayaraman
5 October 2020, 3:16 pm
Quick Share

தேனி: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் 75 நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தேனி தாலுகாவில் 11 நகரும் நியாய விலைக்கடைகள், பெரியகுளம் தாலுகாவில் 16, ஆண்டிப்பட்டி தாலுகாவில் 33, போடி தாலுகாவில் 7 உத்தமபாளையம் தாலுகாவில் 8 நியாயவிலைக் கடைகள் என தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 75 நகரம் நியாயவிலைக் கடைகள் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 13,555 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும் கூட்டுறவுத்துறை மூலம் தேனி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மூலமாக 178 பயனாளிகளுக்கு 3 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 223 ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 33

0

0