அமமுக வேட்பாளர் பொன் ராஜா வாக்கு சேகரிப்பு

28 March 2021, 3:33 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன் ராஜா பிரஷர் குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தனித்தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன் ராஜா வேண்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில்சிறப்பு வழிபாடு நடத்தி, தடபெரும்பக்கம், அனுப்பம்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அமமுக ஒன்றியச் செயலாளர் சங்கர் ராஜா லோகநாதன், தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் அங்கமுத்து, தனஞ்ஜெயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Views: - 9

0

0