சசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்

27 January 2021, 3:57 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முறைப்படி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே சசிகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முறைப்படி அவரை விடுதலை செய்ததை திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சாருபாலா தொண்டைமான் தலைமையில் அக்கட்சியினர், திருச்சி தில்லைநகர் பிரதான சாலையில் பட்டாசு வெடித்த கொண்டாடினர். பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த கொண்டாட்ட நிகழ்வின்போது ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சசிகலாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

Views: - 10

0

0