கோவையில் தீபாவளியை ஒட்டி கூடுதலாக 50 சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம்

2 November 2020, 11:02 pm
Quick Share

கோவை: கோவையிலிருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதலாக 50 சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக கோவைவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவையில் இருந்து முதல் கட்டமாக 50 சிறப்பு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 10 ஆம் தேதி முதல் 50 சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்து இயக்கப்படும் என்றார்.

Views: - 21

0

0