ஆந்திரா to திருச்சி: லாரியில் கஞ்சா கடத்திய இருவர் கைது

6 October 2020, 9:20 pm
crime-arrest-updatenews360
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே தார் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியில் கஞ்சா கடத்திய லாரி ஓட்டுனர் உள்பட இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே மாதவரம் தனிப்படை சிறப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தார் ஏற்றி வந்த டேங்கர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 500 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனர் சச்சின் நாராயணன், அவரது உதவியாளர் சுந்தர் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு கஞ்சா கடத்தியது ஓப்புக்கொண்டனர். இதையடுத்து து செய்து டேங்கர் லாரி மற்றும் 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 43

0

0