ஆண்டிபட்டியில் கிணற்றில் விழுந்து பெண் பலி: போலீசார் விசாரணை

Author: kavin kumar
9 August 2021, 6:57 pm
Quick Share

தேனி: ஆண்டிபட்டியில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள காமராஜ் நகரில் பயன்பாட்டிலுள்ள கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க பெண் விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காமராஜ் நகரில அசோகன் என்பவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் அதிகாலை வீட்டை விட்டு சென்றவர் ,வெகு நேரமாக வீட்டுக்கு திரும்பவில்லை. இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்காததால் ,தற்செயலாக அருகாமையில் உள்ள கிணற்றில் பார்த்துள்ளனர். அப்போது ஒரு பெண் மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது .இதனை அடுத்து ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் கணேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ,கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பெண்ணின் உடலை மீட்டனர். அந்த உடல் அசோகன் என்பவருடன் மனைவி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆண்டிபட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இறந்துபோன விஜயலட்சுமிக்கு 36 மட்டும் 34 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 181

0

0