திருந்தி வாழ முயன்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது: 2 குற்றவாளிகள் பேருக்கு கொரோனா

Author: Udayaraman
10 October 2020, 11:13 pm
Quick Share

புதுச்சேரி: திருந்தி வாழ முயன்ற ரவுடியை அவரது கூட்டாளிகளை அடித்து கொன்ற சம்பவத்தில், 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் திப்பளான். ரவுடியான இவர் மீது இரட்டை கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திப்பளான் கை, கால்களில் பலத்த காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். திப்பளான் உயிரிழந்ததை அடுத்து அவரை தாக்கியது யார் என்றும் அவர் மருத்துவமனை அருகே எப்படி வந்தார் என்பது குறித்தும் பெரியகடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது அவரின் கூட்டாளிகள் என்றும், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியில் திப்பளானை அடித்து அரசு மருத்துவமனை அருகே அவரை வீசிவிட்டு சென்றுள்ளனர் என்றும் கண்டுப்பிடித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கை பெரியகடை போலீசார் அரியாங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் திப்பளான் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து அவரை அடித்து கொலை செய்த அவரின் கூட்டாளிகளை தேடி வந்த நிலையில், அவர்கள் ஏ.எஃப்.டி மைதானம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து,

அங்கு விரைந்த அரியாங்குப்பம் போலீசார் பதுங்கி இருந்த சைமன் உட்பட 7 பேரை கைது செய்து கொரோனா பரிசோதனைகாக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அப்போது கைதானவர்களில் சவுந்தர் மற்றும் கவுசிக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை மருத்தவமனையில் அனுமதித்த போலீசார், மற்ற ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திப்பளானுக்கு திருமணமானதை அடுத்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனைவி, குழந்தைகளுடன் திருந்தி வாழ தொடங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்றதாகவும்,

இதனால் இவருடன் வழக்குகளில் உடன் இருக்கும் தங்களை மட்டும் வழக்குகளில் இனைத்து கொண்டு தங்கள் வாழ்க்கையை சீர் அழித்து விட்டு திப்பளான் திருந்தி வாழ்வதால் கடும் ஆத்திரமடைந்ததால் திப்பளானை அரியாங்குப்பம் அரிக்கமேடு பகுதியில் கட்டி வைத்து கட்டை மற்றும் இரும்பு ராடால் தாக்கி அவரை அரசு மருத்துவமனை அருகே வீசிவிட்டு சென்றதாக ஒப்புகொண்டுள்ளனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட திப்பளானின் கூட்டாளிகளான சைமன், ஜான் டேவிட், வெங்கடேஷ், தனிகை அரசு, தேச்சப்பன் ஆகியோரை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரை தாக்க பயன்படுத்தி இரும்பு ராட் மற்றும் செல்போஃன்களை பறிமுதல் செய்தனர்.

Views: - 30

0

0