தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக சார்பாக அன்னதானம் : கோவை மண்டல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

28 January 2021, 4:59 pm
Thaipoosam Thangam- Updatenews360
Quick Share

கோவை : வடவள்ளியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் கோவில்களில் இன்று தைப்பூசத்திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு முதன்முறையாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக சார்பாக கோவையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பாக 15ஆம் ஆண்டு அன்னதானம் நிகழ்ச்சியில் கட்சியினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த அன்னதான நிகழ்ச்சியில் வடவள்ளி மண்டல பொதுச்செயலாளர் பூபாலன், மண்டல தலைவர்கள் வேல்முருகன், பிரதாப், சிறப்பு அழைப்பாளராக மாநகர மாவட்ட செயலாளர் பூவை.தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வேலாண்டிபாளயைம் மண்ட பொது செயலாளர்கள் நாகேந்திரன், நாகராஜ், கணபதி மண்டலத் தலைவர் வெங்கடேஷ், வர்த்தக அணியின் மண்டலத் தலைவர்கள், உதய்குமார், மணி, பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Views: - 0

0

0