சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மற்றொரு லாரி மோதி விபத்து

1 November 2020, 8:37 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து திருப்பத்தூருக்கு தனியாருக்கு சொந்தமான இரு லாரிகள் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஓர் லாரியின் டயர் வெடித்த நிலையில்,
இரு லாரிகளின் ஓட்டுநர்களும் லாரியை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு டயரை பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஸ்ரீபெரும்பத்தூரில் இருந்து மும்பைக்கு பெயின்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த சிமென்ட் ஏற்றி வந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பெயின்ட் லோடு ஏற்றிவந்த லாரி ஓட்டுநருக்கு கால்முறிவு ஏற்ப்பட்டது, உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0