கூட்டணி குறித்து 24 மணி நேரத்திற்குள் விடைகள் கிடைக்கும்: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி

5 March 2021, 7:43 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், என்ஆர் காங்கிரசு உடனான கூட்டணி குறித்து 24 மணி நேரத்திற்குல் விடைகள் கிடைக்கும் என புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக என்.ஆர் காங்கிரஸ் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டணி பங்கீடு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு வர கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக என்ஆர் காங்கிரஸ் தலைவரும் பாஜக தலைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உங்கள் தேவையை எங்கள் வாக்குறுதி என்ற பிரச்சார வாகனம் பேரணியானது புதிய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கப்பட்டது. இதில் பாஜக இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா , ராஜி சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியை புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மக்களை குழப்ப என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளது என்றும் மக்கள் நலன் கருதி ரங்கசாமி பாஜக கூட்டணியில் தொடர்வார் இதற்கான விடை 24 மணி நேரத்தில் தெரியவரும் என தெரிவித்தார்.

Views: - 1

0

0