வேளாண்மை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Author: Udhayakumar Raman
27 October 2021, 6:28 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வேளாண்மை அதிகாரிகளுக்கு காணொளி காட்சி மூலம் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அக்டோர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுகளில் மக்கள் நேரடியாக அரசுத்துறைகளை அணுகி புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்வது வழக்கம். இதனால் அரசுக்கு கூடுதல் நிதி வருவாய் கிடைத்தது. நிதி கசிவு தடுக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்பு வார உறுதி மொழியை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் முக்கிய துறைகளில் வேளாண்மை துறை மின்சாரத்துறை ரூபாய் காவல்துறை குழந்தை வளர்ச்சித் துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பதுடன் மக்களிடம் கையூட்டு பெறாமல் அவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில், நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வேளாண் துறை சார்ந்த 64 உயர் அதிகாரிகள் காணொளி காட்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

டிஎஸ்பி கலைச்செல்வன் லஞ்சம் வாங்குவதால் எப்படிப்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதை விளக்கமாகக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் அண்ணாதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 64

0

0