லஞ்ச ஒழிப்பு துறையினர் ரயில்வே பயணிகளுக்கு விளம்பர நோட்டீஸ் அளித்து விழிப்புணர்வு

Author: kavin kumar
28 October 2021, 3:56 pm
Quick Share

காஞ்சிபுரம்: லஞ்சம் அளிப்பதும் பெறுவதும் தவறு என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரயில்வே பயணிகளுக்கு விளம்பர நோட்டீஸ் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையுடனான தற்சார்பு என்ற தலைப்பில் பல கட்ட விழிப்புணர்வு பிரசாதத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு லஞ்சம் பெரிய தடையாக இருப்பதால் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் – லஞ்சம் வாங்குவதும் குற்றம் எனவும் லஞ்சப் புகார்கள் தெரிவிக்க அலைபேசி எண்களை பதிவிட்டு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட காவல்துறையினர் இன்று புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் லஞ்ச ஒழிப்பு குறித்து நோட்டீஸ் வினியோகம் செய்தனர் .ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் இடமும் ,ரயிலில் பயணம் செய்த பயணிகள் இடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நோட்டீஸ் விநியோகம் செய்தனர் .மேலும் ரயில் நிலையத்தில் இது குறித்து விழிப்புணர்வு பதாகையும் வைக்கப்பட்டது

Views: - 162

0

0