நன்னிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

22 October 2020, 10:10 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்ததையடுத்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் இன்று மாலை தொடங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திலேயே உள்ளனர். மேலும் அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் 4 பேரையும், அலுவலகத்தின் உள்ளே வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 33

0

0