ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
Author: kavin kumar29 October 2021, 8:28 pm
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அங்கு பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Views: - 283
0
0