ஆரணியில் 10 வயது சிறுமி உயிரிழப்பு: உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது

Author: Udhayakumar Raman
12 September 2021, 6:44 pm
Quick Share

திருவண்ணாமலை: ஆரணி அசைவ ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோட்டில் இயங்கி வருகிறது, அசைவ உணவகமான 7 ஸ்டார் ஹோட்டல். இந்த அசைவ உணவகத்தில் கடந்த 8 ஆம் தேதி இரவு நேரத்தில் ஆரணியில் உள்ள அரிசி ஆலையில் பணி புரியும் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்த ஆனந்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பிரியதர்ஷினி சரண் மற்றும் அவருடைய மகள் லோக்ஷினி (வயது-10), ஆரணி ஷராப் பஜார் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் சந்தியா மற்றும் லட்சன், திலகவதி, பாத்திமா யாகூப், டிஷ்ணு, சீனிவாசன் என பலர் சாப்பிட்டுள்ளனர்.கெட்டுப்போன உணவில் சமைக்கப்பட்டிருந்த உணவென்பதால், இவர்கள் 12 பேருக்கும் நேற்று வாந்தி மயக்கம் உள்ளிட்ட அஜீரன கோளாறு ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், ஆனந்தனில் 10 வயது மகள் லோக்ஷினி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

சிறுமியின் இழப்புக்கு நியாயம் கேட்டு ஆரணி பகுதி மக்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் கூடியதால் நேற்று முழுவதும் அப்பகுதி பரபரப்பாகவே இருந்தது. தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி கோடீஸ்வரன் மற்றும் போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 11 பேர் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிடுமாறு மருத்துவர்களிடம் கோரினார்.தொடர்ந்து, அந்த 7 ஸ்டார் அசைவ ஹோட்டல் உரிமையாளர் அம்ஜத்பாஷா மற்றும் சமையல்காரர் முனியாண்டி இருவரிடமும் ஆரணி நகர காவல் நிலைய போலிஸார் தரப்பில் விசாரணையும் நடந்தது. நேற்றிரவு நடந்த அந்த விசாரணையை இன்று காலையில் முடித்து, இருவரையும் தற்போது கைது செய்து வந்தவாசி சார்பு நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் படுத்தியுள்ளனர் காவல்துறையினர். அதைத்தொடர்ந்து இருவரையும் வந்தவாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 131

0

0