முழு ஊரடங்கிலும் இயல்பு நிலையில் காணபட்ட அரியலூர் நகரம்: வாகன ஒட்டிகளை எச்சரித்த போலீசார்

10 May 2021, 8:14 pm
Quick Share

அரியலூர்: முழு ஊரடங்கிலும் அவசியமின்றி வெளியில் சுற்றிய இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் நகரம் எப்போதும் போலவே இயல்பு நிலையிலே காணப்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களின் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறாகவே காணப்பட்டது. வாகனத்தை கட்டுபடுத்த நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கபட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி தேரடி பகுதியில் எஸ்ஐ உதயகுமார் சோதனையில் ஈடுபட்டு அவசியமின்றி வெளியில் சுற்றிய இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகளை எச்சரித்து அனுப்பினார். மேலும் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது. முழு ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் எடு்த்தால் மட்டுமே கூட்டத்தை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Views: - 39

0

0