அரியலூரில் மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர் சந்தை

Author: kavin kumar
18 August 2021, 2:57 pm
Quick Share

அரியலூர்: மீண்டும் மக்கள் பயன்பாட்டு திறக்கப்பட்டுள்ள அரியலூர் உழவர் சந்தையில் பொதுமக்கள் காய்காறி வாங்கி சென்றனர்.

அரியலூரில் உழவர்சந்தை கடந்த 2000 ஆவது ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கபட்டது. இந்நிலையில் 14 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஊரடங்கின்போது ஒருமாதம் செயல்பட்டது. பின்னர் மீண்டும் மூடப்பட்டது. இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிவுற்று இன்றுமுதல் உழவர்சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது. இதில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், கருவாடு உள்ளிட்டவைகளை விற்பனைக்கு வைக்கபட்டிருந்தன. இந்நிலையில் நிர்வாகத்தின் சார்பில் இலவச எடை இயந்திரம், எடைக்கல் வழங்கபட்டுள்ளது. மேலும் மற்ற கடைகளை விட 20 சதவீதம் குறைந்த விலைக்கு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பிச்சை தெரிவித்தார்.

Views: - 192

0

0