துக்க நிகழ்ச்சிக்கு சென்ற டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து; 19 பேர் படுகாயம் …
26 August 2020, 2:06 pmஅரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த 19 பேர் காங்கேயன்குறிச்சி கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு டாடாஏசி வாகனத்தில் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காங்கேயம் குறிச்சி ஏரி அருகே சென்றபோது எதிரில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும் வகையில் டாட்டா ஏசி வாகனத்தை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் அம்சவல்லி, இந்திராணி ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.