அதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்…

10 August 2020, 5:27 pm
Quick Share

அரியலூர்; ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிடும் அதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி இல்லாமல் பணிகளை ஆளுங்கட்சியினருக்கு வழங்கி வருவதாகவும்,

ஊராட்சியில் 15 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு தலைமை கொறடா ராஜேந்திரனுக்கு உடந்தையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவை தவிர்த்த அனைத்துக் கட்சி சார்பான ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Views: - 10

0

0