ஞாயிற்று கிழமைகளில் இயல்பு நிலைக்கு திரும்பிய அரியலூர் பொதுமக்கள்

6 September 2020, 2:52 pm
Quick Share

அரியலூர்; அரியலூரில் ஊரடங்கு தளர்த்திய பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் கடைவீதிகள் எப்போதும் போல் உள்ளதாகவும், மக்கள் வர தொடங்கியுள்ளதால் வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பும் என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதாலும் இன்று ஞாயிற்றுகிழமை என்பதாலும் அரியலூரில் உள்ள ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

காய்கறி கடைகள்,மளிகை கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளும் ஞாயிற்றுகிழமைகளில் வழக்கம்போல் செயல்பட தொடங்கின. மேலும் போக்குவரத்து எப்போதும் போல குறைவான பயணிகளுடன் இயக்கபட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்திய பிறகு வந்த முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் கடைவீதிகள் எப்போதும் போல் உள்ளதாகவும் மக்கள் வர தொடங்கியுள்ளதால் வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பும் என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0