தமிழகத்தில் ரஜினி தலைமையில் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும்: அர்ஜீன் சம்பத் பேட்டி…

18 September 2020, 9:06 pm
Quick Share

திருப்பத்தூர்: தமிழகத்தில் ரஜினி தலைமையில் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும் என ஜோலார்பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட பொன்னேரியில் இந்து மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,

தமிழகத்தில் நீட் தேர்வால் 13 மாணவ,மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு திமுக தான் காரணம். தமிழகத்தில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தாலே நீட் தேர்வால் ஏற்படும் தற்கொலை குறையும்.மேலும் தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் ஆன்மிக அரசியல் அணி சார்பில் நடிகர் ரஜினி தலைமையில் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடைப்பெறும் என்றார்.