3 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது; கயர்லாபாத் காவல்துறையினர் அதிரடி

30 November 2020, 9:24 pm
Quick Share

அரியலூர்: 3 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கயர்லாபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல்நிலையத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கோப்பிலியன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், செந்தில், திருமுருகன், ரமேஷ், முருகேசன் உள்ளிட்ட 5 குற்றவாளிகளையும் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. இந்நிலையில் இன்று தனிபடை போலீசார் தலைமறைவாக இருந்த 5 பேரையும் கைது செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். பின்பு குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கபட்டனர்.

Views: - 0

0

0