சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

16 August 2020, 10:22 pm
Quick Share

தேனி: கம்பத்தில் முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 557 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தேனி மாவட்டம் கம்பத்தில் முழு ஊரடங்கின் போது மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருந்த நிலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மதுபானக் கடைகள் சுதந்திர தினம் மற்றும் இன்று முழு ஊரடங்கினால் தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கம்பம் மின் வாரிய சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கூடலூர் சேர்ந்த சிவபாலன் என்பதும், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிவபாலனை கைது செய்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 557 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.