6 காவலர்களுக்கு கொரோனா… காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்…
2 August 2020, 7:05 pmவிருதுநகர்: அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள நகர் காவல் நிலையத்தில் 30 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணிபுரியும் காவலர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இந்த பரிசோதனை முடிவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதையடுத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.