குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டை விரலைக் கடித்து துப்பிய ஆசாமி

By: Udayaraman
10 October 2020, 9:43 pm
Quick Share

சென்னை: புழல் அருகே குடிபோதையில் தகராறு ஏற்பட்டு வாலிபரின் கட்டை விரலை கடித்து பற்களை உடைத்த ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னை புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் நேற்று இரவு மதுபோதையில் புழல் திருநீலகண்ட நகர் 4வது தெருவில் நண்பர் முனுசாமி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபி( 27 )என்பவர் பிரதீப்பை பார்த்ததும் அவரை வீண் வம்புக்கு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சண்டையில் ஆத்திரமுற்ற கோபி, பிரதீப்பின் முகத்தில் கையால் தாக்கியதால் அவரின் இரண்டு முன்பக்கபற்களும் உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் கோபம் தனியாமல் வலது கை ஆள்காட்டி விரலையும் கடித்து துப்பினார். பலத்த காயமுற்ற பிரதீப் வலியில் அலறி துடித்ததும் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து ரத்த காயங்களுடன் இருந்த பிரதீபை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கோபியின் சகோதரர்களான சத்யநாராயணன் , பிரேம் விஸ்வரூப் ,உறவினர் கௌரிசங்கர் ஆகியோர்களை புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கோபியை போலீசார் தேடி வருகின்றனர் .

Views: - 33

0

0