அஸ்ஸாம் துப்பாக்கி சூடு: தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
28 September 2021, 2:32 pm
Quick Share

மதுரை: அஸ்ஸாம் துப்பாக்கி சூடு பொதுமக்கள் மூவர் பலியானதை கண்டித்து மதுரையில் தமுமுக வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அசாம் மாநிலம் தோல்பூர் அருகே கோருகுட்டி கிராமத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில், அம்மாநில பாஜக அரசு ஆக்கிரமிப்பாளர் என்று 3 அப்பாவிகளை சுட்டுக் கொன்றது. இதனை கண்டித்து மதுரை புதூரில் தமுமுக வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் இப்னு, மதுரை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ், தலைமை கழக பேச்சாளர் ஒய்.அப்பாஸ், ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர். மாநில துணை பொதுச்செயலாளர் முகமது கவுஸ் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் கஜினி முகம்மது, மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் சையது அபுதாஹிர், ரபீக்ராஜா, பஷீர்அகமது, ராஜாமைதீன் உள்பட ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Views: - 138

0

0