உதவிப் பேராசிரியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை

14 April 2021, 10:57 pm
Quick Share

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உதவிப் பேராசிரியர் வீட்டில் புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வடவள்ளி சிறுவாணி சாலையில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் ஆனந்தம். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி ஆனந்தம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு திண்டுக்கல் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில்,

இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட தை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தம், இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Views: - 18

0

0