மரம் விழுந்து மின்சாரம் தடை : கால்நடை மருத்துவமனையில் கடும் அவதி

2 September 2020, 1:08 pm
Quick Share

மதுரை : கனமழையால் மின்சாரம் தடைப்பட்டதையடுத்து அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் நேற்று இரவு பெய்த கன மழையில் பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.

மின்சார கம்பி மீது விழுந்ததால் மருத்துவமனையில் முழுமையாக தற்போது வரை மின்சாரம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணியான ஆடு நாய் மாடு உள்ளிட்டவைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கும் போது அங்கு எக்ஸ் ரே, ஸ்கேன் உள்ளிட்ட வகைகளை எடுப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கால்நடை பன்முக மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் பணிபுரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக மரத்தை அகற்றி மின்சாரத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மருத்துவ ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 6

0

0