ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபரை கைது செய்து விசாரணை

27 January 2021, 1:28 pm
Quick Share

வேலூர்: வேலூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனார்.

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்(வயது20 )இவர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மையத்திற்கு சென்று அங்கிருந்த எந்திரத்தை உடைக்க முயன்றார். அப்போது ஏ.டி.எம் மையத்தில் உள்ள அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் பயந்துபோன அந்த வாலிபர் ஏடிஎம் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

தொடர்ந்து அங்கிருந்து அபாய ஒலி கேட்டதால் இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் லோகேஷ் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து இன்று காலை அப் பகுதியில் பதுங்கியிருந்த லோகைசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.