இஸ்லாமிய கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: காவல்துறை ஆணையரிடம் இஸ்லாமிய அமைப்பினர் மனு

14 July 2021, 4:56 pm
Quick Share

திருச்சி: இஸ்லாமிய கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களை கண்டித்தும், தடுக்க தவறிய காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஷேக் அகமது தலைமையில் இன்று மாலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கத்திடம் மனு அளித்தனர். அம்மனுவில் நேற்று இரவு சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள மண்ணடியில் அமைந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று மத்திய வேலையிலேயே துறைமுகத் காவல்துறை சரக உதவி ஆணையர் கோடிலிங்கம் என்பவற்றிலும் இதுகுறித்து தகவல் கொடுத்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பும் கொடுக்க வில்லை. எனவே காவல்துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீதும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த உதவி ஆணையர் கோடிலிங்கத்தை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.

Views: - 74

0

0