மதுபானக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி: குற்றவாளிக்கு போலீசார் வலை…

Author: kavin kumar
6 November 2021, 6:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மர்ம நபர்கள் மதுபானக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பத்துகண்ணு சாலையில் அமைந்துள்ளது. ஒரு தனியார் மதுபான கடை, இன்று காலை கடையை திர்ப்பதற்காக காசாளர் குமார் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது கடை ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது சிசிடிவி கேமிரா ட்ரைவ் மற்றும் கம்யூட்டர் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காசாளர் குமார் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நள்ளிரவு 12.45 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் கடைக்குல் புகுந்து உள்ளே மற்றும் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா களை உடைத்து, கடையில் இருந்த இரும்பு பண பெட்டியை உடைக்க முயற்சித்து இருப்பதும், அது பலமான இரும்பு பெட்டி என்பதனால் அவர்கள் அதை உடைக்க முடியாமல் அங்கிருந்த சிசிடிவி ட்ரைவ் மற்றும் கம்ப்யூட்டர்களை திருடி சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மது கடையை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 294

0

0