பிரதமர் உருவ பொம்மை எரிக்க முயற்சி:குண்டுகட்டாக தூக்கி கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Author: kavin kumar
16 October 2021, 1:54 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல்துறையினர் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 வேலைத்திட்டங்களை ரத்து செய்ய கோரியும் , டெல்லியில் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிராக மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய பகுதியில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மோடியின் உருவ பொம்மையை எறிக்க முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்ததால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 231

0

0