தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் பெரும் ஏமாற்றம்: தொடர்ந்து மூன்று நாட்களாக தடுப்பு ஊசி போடாததால் திரும்பிச் செல்லும் அவல நிலை

7 July 2021, 2:59 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 4 லட்சத்து 37 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 3 லட்சத்தி 68 ஆயிரம் பேர், இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்கள் 68,000 பேர், தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து தற்போது சற்று குறையத் தொடங்கி உள்ள நிலையில், பாதிப்பில் இருந்து தப்புவதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என அரசு சொல்லி வரக்கூடிய நிலையில், பொதுமக்கள் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்களில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,

தற்போது கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தஞ்சை மாநகர் பகுதியில் தடுப்பு ஊசி போடாததால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். தஞ்சை நகர பகுதியில் மட்டும் சுமார் நான்கு மையங்களில் தடுப்பூசி போட்டு வந்த நிலையில் வருபவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். வருபவர்களுக்கு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிவிப்பு பலகையில் தடுப்பூசி தற்போது கையிருப்பு இல்லை தடுப்பூசி வந்தவுடன் போடப்படும் என அறிவித்து இருக்கிறதே தவிர, எப்போது வருமென இல்லாததால் தினந்தோறும் அழைய கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Views: - 113

0

0