தனியாக வசித்த முதியவரின் சொத்தை அபகரிக்க முயற்சி: விசிக பிரமுகர் உட்பட 3 பேர் கைது…

Author: Udayaraman
5 August 2021, 8:43 pm
Quick Share

சென்னை: தனியாக வசித்த முதியவரின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் விசிக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலண்டனில் வசித்து வந்த வெளிநாட்டு வாழ் தம்பதிகளான பசுபதி – மங்களேஸ்வரி தம்பதிகள்.சென்னையை பூர்விகமாக கொண்ட இவர்கள் இருவரும் கடந்த 1982 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் என்.ஆர் கார்டன் பகுதியில் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட இடத்தை மங்களேஸ்வரி பெயரில் வாங்கி அதில் பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளனர்.இருவரும் இலண்டனில் வசித்து வந்தாலும் சென்னைக்கு வரும் பொழுது இதில் தங்கியுள்ளனர். அதன் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு மங்களேஸ்வரி தனது சொத்துக்களை மகள் மற்றும் தனது பேர குழந்தைகள் பெயரில் செட்டில்மென்டாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் மனைவி மங்களேஸ்வரியின் மறைவுக்குப் பிறகு , பசுபதி இலண்டன் சென்றுள்ளார்.
வயது மூப்பு காரணமாக இலண்டன் சுற்றுசூழல் அவருக்கு ஒத்துவராததால் அவர் சென்னை வீட்டில் நிலையில் தனியாக தங்கி வந்துள்ளார். அப்போது லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பசுபதியின் மகள் சித்ரா தேவி தனது வயதான தந்தையை கவனிப்பதற்காக ஆள் வேண்டும் என செய்திதாளில் விளம்பரம் செய்கிறார்.அதனை பார்த்து கொளத்தூர் பகுதியை சேர்ந்த அம்பிகா (58) என்ற பெண்மணியை மாதம் 20 ஆயிரம் ஊதிய அடிப்படையில் பணியமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் பசுபதிக்கு உடல்நிலை குன்றவே அம்பிகா மூலம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த செவிலியரான சினேக லதா (68) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்.செவிலியரான சினேகலாதாவிற்கு 4 மொழிகள் தெரிந்ததால் வெளிநாடு வாழ் நபரான பசுபதியோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.அதனால் பசுபதி இரண்டாம் தாரமாக கடந்த 2018 ஆம் ஆண்டு சினேகலதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சினேகாலதா மற்றும் அம்பிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு அம்பிகாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் சினேகலாதா.

இதனை அறிந்து கொண்ட விசிக பிரமுகர் அப்புன் (எ) தயாள மூர்த்தி தனது வீட்டு அருகே வீட்டு வேலை செய்து வரும் பெண்மணியான சுமதி/40 யை பசுபதியை கவனித்துக் கொள்ள அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில் பசுபதி கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு உடல் நிலைப் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.பசுபதி உயிரிழந்த நேரத்தில் மகள் சித்ரா தேவி தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் அப்புன் (எ) தயாள மூர்த்தி, அம்பிகா, சுமதி, சினேகலதா உள்ளிட்டோர் கூட்டாக சித்ரா தேவியை தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்யக் கூடாது என தடுத்துள்ளனர்.

மேலும் மனைவி சினேகலதா இருக்கும் பொழுது மகள் சித்ரா தேவி இறுதி சடங்கை செய்யக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.பின்னர் போலீசாரின் தலையீட்டால் ஒரு வழியாக இறுதிச் சடங்குகள் முடிய , சில நாட்கள் ஈமகாரியங்களுக்காக சித்ராதேவி தங்கியிருந்த பொழுது சினேகலாதா மற்றும் அப்புன் ஆகியோரின் சுயரூபத்தை அவர் அறிந்து கொண்டும் வீட்டில் பல பொருட்கள் காணமால் போய் இருப்பதை கண்டு சண்டையிட்டாள். ஒரு கட்டத்தில் இது பசுபதியின் சொத்து எனவும் , அவரது மனைவி சினேகலாதைவிற்கு சொந்தமானது எனக்கூறி அப்புன் உள்ளீட்டோரோடு சேர்ந்து சித்ராதேவியை வெளியேற்றியுள்ளனர்.

மேலும் விசிக பிரமுகரான அப்புன்(எ) தயாள மூர்த்தி, அம்பிகா, சுமதி மற்றும் சினேக லதா, அருண் ஆகியோர் தந்தையின் இரண்டாவது மனைவியான சினேகலாதாவிற்கு 1 கோடி ரூபாய் கொடுத்தால் வெளியேறி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும், தொலைபேசியில் சித்ரா தேவியை தொடர்பு கொண்டு தொடர்ந்து 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் பேசியும் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தேவி இது தொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தனது அம்மாவின் சொத்தை எவ்வாறு இவர் உரிமைகோருவது , அவரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு அப்பொழுதே புகார் அளித்த நிலையில் சிவில் வழக்கு என்பதால் நீதிமன்றத்தை நாடக் கூறியதால்
சென்னை உயர்நீதி மன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் விசிக பிரமுகர் அப்புன் உள்ளிட்டோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் நில அபகரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வி.சி.க பிரமுகரும் வழக்கறிஞர் அபுன் (எ) தயாளமூர்த்தி (38), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா (58), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சுமதி (40), ஆகிய மூவரை கைது செய்தனர்.

சினேகலதாவை/68 வீட்டில் இருந்து வெளியேற்றி பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.அவர்கள் மீது நில அபகரிப்பு , திருட்டு , அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் அருண் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.

Views: - 135

0

0