பாஜக நிர்வாகி மீது புகார் கூறி வாலிபர் தற்கொலை முயற்சி… வாலிபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது…

1 September 2020, 11:43 pm
Quick Share

கரூர்: கரூரில் பாஜக நிர்வாகி மீது புகார் கூறி வாலிபர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அளவில் தந்தை, மகன் ஆகியோரை காவல்துறையினர் கொலை செய்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், அந்த வடு கூட மறையாத நிலையில், கந்துவட்டி பிரச்சினை என்று கூறி., இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு தீக்குளித்த சம்பவம் தற்போது விஷ்வரூபமெடுத்துள்ளது. கரூர் நகர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் இவரது தாய் சுகுணாவுடன் வசித்து வருகிறார். இவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சுகுணா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மாவட்ட இளைஞரணி நிர்வாகி கணேசமூர்த்தி இடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தொடர்ந்து அசல் தொகையை விட கூடுதலாக வட்டி கட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக வட்டி கட்டவில்லை. இந்நிலையில் அசல் தொகை மற்றும் வட்டியை கட்டுமாறு கணேசமூர்த்தி மிரட்டியுள்ளதாக தெரியவருகிறது. மீண்டும் வீட்டிற்கு சென்று தொடர்ந்து கந்து வட்டி போல் வட்டி கட்ட சொல்லி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து கொண்ட சுகுணா தனது சொந்த ஊரான விருதுநகர் சென்றுவிட்டார். இந்நிலையில் கோபிநாத் வீட்டில் இருந்தபோது மீண்டும் கணேசமூர்த்தி அடியாட்களுடன் வீட்டிற்கு சென்று மிரட்டி பணத்தை கேட்டுள்ளதாகவும், இதனால் மன வேதனை அடைந்த கோபிநாத் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மறைத்து எடுந்து வந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி கந்து வட்டி வசூல் செய்து மிரட்டியதால் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், கந்துவட்டி கொடுமை தாங்க முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும் எந்த வித பலனும் இல்லாத நிலையில்,. இளைஞர் ஒருவர் தீக்குளித்து முயற்சித்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தீக்குளித்த இளைஞர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 5

0

0