மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா: சேவல்களை பலி கொடுத்து ஆண்கள் மட்டுமே உண்டு வழிபடும் விநோதம்

Author: Udhayakumar Raman
31 July 2021, 10:31 pm
Quick Share

மதுரை: மேலூர் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே வழிபாடும் விநோத விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி இரண்டாவது வெள்ளிகிழமையன்று இந்த திருவிழா எளிமையான முறையில் இந்தாண்டு நடைபெற்றது. இங்குள்ள மதுரைவீரன் சுவாமி ஆடிபடையல் வருடம் தோறும் ஆடிமாதம் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்படும். இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற்றும் வண்ணமாக சேவல்களை பலிகொடுத்து வணங்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து இந்தாண்டு குறைந்தளவில் 70க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் சுவாமிக்கு நேர்த்திகடனாக வழங்கப்பட்டது. பின்னர் அதனை பலிகொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைபயறு கலந்து சமைக்கப்பட்டது. பெண்களுக்கு சுவாமி கும்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டு, சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது. முழுக்க, முழுக்க ஆண்களுக்கு மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழிபாடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Views: - 116

0

0