மதுபோதையில் ஆட்டோ டிரைவர் கொலை

By: Udayaraman
16 October 2020, 10:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மதுபோதையில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உறுவையாறுபேட் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் நேற்று முன்தினம் அந்தபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் வைத்து மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. மதுஅருந்திக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை அந்த நபர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் அவர் இறந்து விடவே அங்கேயே வெங்கடேசனின் உடலை போட்டுவிட்டு தப்பியோடி உள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசன் இறந்து கிடந்த தகவலை அறிந்த மங்கலம் போலீசார் அங்கு வந்தனர். முதலில் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அறியாமல் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174 (மர்ம மரணம்) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உடல்கூறு பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மர்ம மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Views: - 35

0

0