சசிகலா பூரண நலம் பெற வேண்டி நாக்கில் அழகு குத்தி வழிபாடு செய்த ஆட்டோ ஓட்டுநர்: காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு

23 January 2021, 4:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் முருகன் கோவிலில் சசிகலா பூரண நலம் பெற வேண்டி நாக்கில் அழகு குத்தி வழிபாடு செய்த சசிகலா பேரவை தலைவரை காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சொத்து குவிப்பு வழகத்தில் கைது செய்யப்பட்டு பெங்களுரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருக்கும் சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை பெற உள்ளார், இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் சுகம் பெற வேண்டி, பூரண உடல் நலத்துடன் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாகவும், அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தலைமை ஏற்கவும், தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டியும் திருச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும்,

சசிகலா பேரவைத் தலைவருமான ஒத்தக்கடை செந்தில், திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோயிலில், நாக்கில் அலகு குத்தி மவுன விரதம் மேற்கொண்டார். இதனை அறிந்த காவல்துறையினர், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாக கூறி போலீசார் கட்டாயப்படுத்தி ஒத்தக்கடை செந்திலை அப்புறப்படுத்தினர். மேலும், அவர் நாக்கில் குத்தி இருந்த அழகினை கட்டாயபடுத்தி அகற்றி போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 5

0

0