தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்க கோரிக்கை: ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் நூதன போராட்டம்…

Author: Udhayakumar Raman
7 December 2021, 8:23 pm
Quick Share

தஞ்சை: குடந்தை ஐக் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக புதுப்பிக்கக் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து வைக்கப்பட்டு நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக புதுப்பிக்கக் கோரி தாரை தப்பட்டையுடன் கொல்லி சட்டி ஏந்தி பாடைகட்டி கட்சி நிர்வாகி ஒருவரை பிரேதம் போல் மாலை போட்டு அலங்கரித்த வண்ணம் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முரளிதரன், கௌரவத் தலைவர் காதர்உசேன் உட்பட பொது மக்களும், தொழில் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 118

0

0