சிறப்பு ரயில் மூலம் ஈரோடு வந்த 5 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படை

28 February 2021, 7:43 pm
Quick Share

ஈரோடு: தமிழக சட்டபேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனியை சேர்ந்த 500துணை ராணுவப்படை வீரர்கள் சிறப்பு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் துணை ராணுவப்படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகிறது.லக்னோ மாநிலத்தை சேர்ந்த 5 கம்பெனியை சேர்ந்த 500 துணை ராணுவத்தினர் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம், கரூர், அரியலூர் , அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவத்தினர் தற்போது பாரியூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0