அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரணம்
16 September 2020, 10:25 pmQuick Share
கோவை: அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழந்தார் .
அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆரிய வைத்திய பார்மசியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில், அவர் இன்று உயிரிழந்தார். கிருஷ்ணகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.